This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode(UTF-8)'.
Click here to know how to enable Unicode in your browser

இடுக்கண் வருங்கால்

பொதுவாக, திருக்குறள் விளக்கங்கள் ஒரு பத்திக்கும் மேலாக இருக்கும். அதிலும் சில விளக்கங்கள் புரிந்து கொள்ள கடினமாய் இருக்கும்.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

என்ற குறளை நாம் அனைவரும் அறிவோம்.

இந்தக் குறளுக்கு நாம் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையான வகையில் வாரியார் விளக்கம் தருகிறார்.

வாரியார் சொற்பொழிவிலிருந்து..



ஒலி வடிவில் கேட்க இயலாதோருக்காக உரை வடிவில் கீழே:


நம்ம வீட்டுக்கு ஒரு விருந்தாளி வருகிறார்...

அவரைப் பார்த்து நாம் ஏளனமாக சிரித்தால் அவர் நாணி அப்படியே போயிடுவார்...

அது போல நம்மிடம் துன்பங்கள் வருகின்றன...

அந்தத் துன்பங்களைக் கண்டு நாம் சிரிப்போமானால் அந்தத் துன்பங்கள் நாணி கோணி நம்ம விட்டு விலகி போயிடும்.

அதத்தான் திருவள்ளுவர் "இடுக்கண் வருங்கால் நகுக"ன்னார்

துன்பம் வர்றபோது சிரிச்சி மகிழ்ச்சியோட இருக்கனும்.

2 கருத்து(க்கள்)

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

அருமையும் புதுமையுமான விளக்கம். :-)

 

Blogger சிவா சொன்னது�...

'இடுக்கண் வருங்கால் நகுக' விற்கு வாரியார் விருந்தாளியை வைத்து சொல்வது வித்தியாசமாக ரசிக்கும் படி இருக்கிறது. கொடுத்தமைக்கு நன்றி.

 

நீங்க சொல்லுங்க

<< முகப்பு�