This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode(UTF-8)'.
Click here to know how to enable Unicode in your browser

சம்பந்தியும் , குரங்கும் - வாரியார்

நம்ம ஊரில் மணமக்களின் பெற்றோர்களை சம்பந்தி என்று சொல்வோம்.
ஆனால் இன்று அதுவும் மருவி
சம்மந்தி என்று ஆகிவிட்டது.

உண்மையில் சம்பந்தி என்றால் சம்- நல்ல , பந்தி: உறவு.
நம் வீட்டிற்கு சம்பந்தி வந்திருக்கிறார் என்றால் நல்ல உறவினர் வந்திருக்கிறார் என்பது பொருள்.
ஆனால் இன்று யாரும் சம்பந்தி என்று அழைப்பதில்லை.
சம்மந்தி என்றே அழைக்கிறோம்.

அம்மா சம்மந்தி வந்திருக்கிறார் தண்ணி கொடுங்க
அம்மா சம்மந்தி வந்திருக்கிறார் சப்பாடு போடுங்க
அம்மா சம்மந்தி சாப்பிட்டு முடிச்சுட்டார் தாம்பூலம் கொடுங்க

என்று வார்த்தைக்கு வார்த்தை சம்மந்தி என்றே சொல்கிறார்கள்.
ஆனால் சம்மந்தி என்ற வார்த்தைக்கு என்ன பொருள்
சம் என்றால் நல்ல. மந்தி என்றால் குரங்கு..

அம்மா நல்ல குரங்கு வந்திருக்கிறார் தண்ணி கொடுங்க
அம்மா நல்ல குரங்கு வந்திருக்கிறார் சாப்பாடு போடுங்க
அம்மா நல்ல குரங்குக்கு தாம்பூலம் கொடுங்க
என்று வார்த்தைக்கு வார்த்தை குரங்கு என்று சொல்கிறோம்.

ஆனால் அவர் அதையும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டுவிட்டு சொல்கிறார்.
எனவே தமிழில் உச்சரிப்பை மாற்றக்கூடாது.

அவ்வையும் தமிழும் என்ற தலைப்பில் வாரியார் பேசியது
கேட்டு பதிந்தது : செல்வ.முரளி

Labels: , ,

4 கருத்து(க்கள்)

Blogger Unknown சொன்னது�...

அருமை

 

Blogger Anand சொன்னது�...

நமது குருநாதர் வாரியார் சுவாமிகளின் 17 வது குருபூஜை விழா -- 31/10/2010

http://variyarswamigal.blogspot.com/2010/10/17-31102010.html

 

Blogger சுந்தரா சொன்னது�...

மந்தி மாதிரி அவ்வப்போது நடந்துக்கிறதால அப்படிக் கூப்பிடுறாங்களோ என்னவோ :)

வாரியாரின் வாய்மொழிகள் அருமை முரளி!

தொடருங்க.

 

Blogger Unknown சொன்னது�...

அடுத்த பதிவு எப்போது

 

நீங்க சொல்லுங்க

அறிவிப்பு

வருகையாளர்களுக்கு வணக்கம்.

திருமுருக கிருபானந்த வாரியாரின் அருமையான சொற்பொழிவுகளைப் பற்றியும் அவரின் வள்ளல் குணத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள துவங்கப்பட்ட இந்த வலைப்பதிவில் பல்வேறு இடங்களில் இருந்து உரை/ஒலி/காணொளி போன்றவற்றை தொகுத்து இலவசமாக பகிர்ந்து வந்தோம்.

அவ்வகையில் ஆனந்தா ஒலிநாடா நிறுவனத்தின் ஒலிநாடா அட்டையில் இடம் பெற்ற சில உரைகளையும் ஆனந்தா காணொளி வட்டில் இடம்பெற்ற ஒரு காணொளித் துண்டையும் இந்த வலைப்பதிவில் பகிர்ந்து இருந்தோம்.

இது தொடர்பாக மேலும் சில காணொளித் துண்டுகளை (கவனிக்க: முழு காணொளியையும் அல்ல) இந்த வலைப்பதிவில் இலவசமாக பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஆனந்தா ஒலிநாடா நிறுவனத்தைச் சேர்ந்த உயர்திரு. M.கோடிலிங்கம் (இவர் கிருபானந்த வாரியாரின் தம்பி மகன்) அவர்களிடம் வாரியாரின் சீடர் தருமபுரி குமாரசுவாமிப்பேட்டையை சேர்ந்த புலவர் உயர்திரு. க.தியாகசீலன் அவர்கள் மூலமாக செல்பேசியில் ஓராண்டுக்கு முன் தொடர்பு கொண்டு அனுமதி கேட்ட போது அவர் ஆட்சேபம் தெரிவித்தார். அதனால் அந்த உரையாடலுக்குப் பின் ஆனந்தா ஒலிநாடா நிறுவனத்துக்கு காப்புரிமை உள்ள எந்த ஒரு உரையையோ அல்லது ஒலி/காணொளித் துண்டுகளையோ இந்த வலைப்பதிவில் பகிர்ந்து கொள்ளவில்லை.

இதுவரையில் இந்த வலைப்பதிவில் பகிர்ந்து கொண்ட உரை/காணொளி குறித்து அவர் ஏதும் குறிப்பிடாததால் அவற்றை அப்படியே விட்டு வைத்திருந்தோம். இந்நிலையில் இன்று (11 ஜூன் 2009 ) உயர்திரு. M.கோடிலிங்கம் அவர்கள் யூடியூப் நிறுவனத்தில் இது குறித்து காப்புரிமை மீறல் புகார் தெரிவித்திருப்பதால் ஆனந்தா ஒலிநாடாவின் காப்புரிமை அடங்கிய (உரை/ஒலி/காணொளி உட்பட) அனைத்து இடுகைகளையும் இந்தப் பதிவில் இருந்து நீக்கி இருக்கிறோம்.

இந்தப் பதிவில் உள்ள மற்ற இடுகைகளில் பதிவுரிமை மீறல் ஏதும் இருப்பின் எங்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் அவற்றை நீக்கலாம்.

இனி வரும் நாட்களில் இந்த வலைப்பதிவின் இடுகைகளில் யாருக்கும் பதிவுரிமை இல்லாத அல்லது உரிய அனுமதி பெற்ற உரை/காணொளி மட்டுமே வெளியிடப்படும்.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளைப் பற்றி நம் தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் பகிர்ந்து கொள்ள துவங்கப்பட்டதே இந்த வலைப்பதிவு. யாருடைய காப்புரிமையையும் மீறுவதோ அல்லது இந்த வலைத்தளம் மூலம் பொருளாதார ரீதியிலோ வேறெந்த வகையிலுமோ தனிப்பட்ட பயன் அடைவது நம் நோக்கம் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

3 கருத்து(க்கள்)

Blogger Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது�...

உம்ம்ம்...சரி பரவாயில்லை கோபி! காணொளி இல்லாமல் படங்கள் மற்றும் உரிய உரையாடலைத் தட்டச்சியாவது, வாரியார் அமுதத்தைத் தொடருவோம்!

பின்னாளில் என்றேணும் ஒரு நாள், வாரியார் தமிழ் நாட்டுடைமை ஆகட்டும்!

 

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

KRS,

தாமதமாக உங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டமைக்கு மன்னிக்க. ஊருக்கு சென்றிருந்ததால் மின்னஞ்சல்களை கவனிக்க இயலவில்லை.

பல பொது நிகழ்ச்சிகளில் வாரியார் சொற்பொழிவுகள் நடைபெற்று அவற்றை சில தனிப்பட்ட நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் ஒலி/ஒளிப்பதிவு செய்து பதிவுரிமை செய்யாமல் பாதுகாக்கின்றனர்.

அவர்களை தேடிக் கண்டுபிடித்து (கடவுள் விருப்பம் அதுவானால்) அந்த காணொளிகளை அவர்களின் முன் அனுமதியோடு இங்கே வெளியிடுவோம்.

//பின்னாளில் என்றேணும் ஒரு நாள், வாரியார் தமிழ் நாட்டுடைமை ஆகட்டும்!//

உம்ம்ம்ம்.... வாரியார் இந்த உலகுக்கே உரித்தானவர், தனிப்பட்ட யாருக்கும் உரியவர் அல்ல என்பதை தொடர்புடைய எல்லோரும் உணர்ந்தால் மகிழ்ச்சியே.

 

Blogger இனியன் பாலாஜி சொன்னது�...

திரு கோபி அவர்களுக்கு

நான் இந்த வலைப்பூக்களுக்கு எல்லாம் புதிதானவன். இப்போதுதான் மேய
ஆரம்பித்திருக்கிறேன். ( அதுவும் உங்களுடைய கருணையால் )தட்டு தடுமாறி
தமிழில் .

தங்களது வாரியாரும் சீர்காழி யும் பற்றிய கட்டுரையை படித்தேன்.கேட்டேன்.

உள்ளம் உருகி விட்டது. காரணம் நான் அந்த இருவருக்குமே
தொடர்புள்ளவன் என்பதால் . அவர்கள் இருவரும் என் தந்தையாருக்கு நல்ல பழக்கம்.
என் வீட்டிற்க்கு பலமுறை அவர்கள் வந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால்
எனது திருமணமே அவர்கள் இருவரின் ஆசியோடுதான் நடந்தது.என் உடன் பிறந்தோர்களின்
திருமணமும் கூட. அதிலும் குறிப்பாக வாரியார் சுவாமிகள்.காலை 6 மணி முதல் மதியம்
சுமார் 2 மணி வரை திருமண மண்டபத்திலேயே இருந்தார்..என் தந்தையும் அவர்களிருவ்ருடனும் மற்றும் பலருடனும்
எவெரெஸ்ட் சென்றார்.

அதெல்லாம் ஒரு காலம்

இன்று அவர்கள் மூவருமே இல்லை.என் தந்தை போன வருடம் தான் காலமானார்.
கடைசி காலம் வரை அவர்களை பற்றியே எஙகளிடம் பேசிக்கொண்டிருந்தார்.
இன்றும் நான் என் வீட்டில் இருந்து தினமும் வேலைக்கு செல்லும் போது அவரது
சொற்பொழிவுகளை கேட்டு கொண்டுதான் செல்கிறேன்.
நன்றி கோபி சார்.
ஒருமுறை நேரம் கிடைத்தால் என் இல்லத்திற்க்கு வருகை தாருங்கள்.

இனியன் பாலாஜி

 

நீங்க சொல்லுங்க

மடத்துவாசல் பிள்ளையாரடி: ஈழம் வந்த வாரியார்

0 கருத்து(க்கள்)

நீங்க சொல்லுங்க

கடைக்குட்டி

திருவாரூரில் கிருபானந்தவாரியார் பாரதம் சொல்லிக் கொண்டு இருந்தார். சகாதேவன் பற்றி சொல்ல வேண்டி வந்தது. " சகாதேவன் கடைசிப் பிள்ளை. கடைக்குட்டி. அவன் சிறந்த ஞானி. பொதுவாகவே கடைக்குட்டிகள் ஞானியாக இருப்பார்கள். கரணம் அப்பனுக்கு ஞானம் வந்த பிறகு பிறக்கிறவன் கடைக்குட்டி பிள்ளை :) அல்லது இவன் பிறந்த பிறகு அப்பன் ஞானியாகி விடுவான் . என்ன ஞானம் என்கிறீர்களா? இனி குழந்தை பெறவே கூடாது என்ற ஞானம்."

இவ்வாறு விளக்கிய வாரியார்.. கூட்டத்தினரை பார்த்து " இங்கே யாராவது கடைக்குட்டிப் பிள்ளைகள் இருக்கிறீர்களா ?" என்று கேட்டார். 10 அல்லது 15 சிறுமியர்கள் எழுந்து நின்று தாங்கள் கடைக்குட்டிகள் என்றார்கள்.

வாரியர் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. " உட்காருங்கப்பா! யார் எந்த விஷயத்தை முடிவு செய்றதுன்னு விவஸ்தையே கிடையாதா? அம்மா அப்பா என்ன முடிவுல இருக்காங்களோ :)) வீட்டுக்கு போய் உதை வாங்காதீங்கப்பா" என்றார். எல்லோரும் வாய் விட்டு சிரித்தார்கள். குழந்தைகளும் தாங்கள் எத்தனையாவது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் வீடு சென்றனர்.

(நன்றி : சுகி.சிவம் )

6 கருத்து(க்கள்)

Blogger மாயவரத்தான் சொன்னது�...

:D

 

Blogger Unknown சொன்னது�...

என்னையும் ஒரு 'ஞானி' என வாரியார் சொல்லியிருக்கிறார் என அறியத்தந்தமைக்க்கு நன்றி :o)

 

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

துபாய்வாசி,

//வாரியர் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. " உட்காருங்கப்பா! யார் எந்த விஷயத்தை முடிவு செய்றதுன்னு விவஸ்தையே கிடையாதா? அம்மா அப்பா என்ன முடிவுல இருக்காங்களோ :)) வீட்டுக்கு போய் உதை வாங்காதீங்கப்பா" என்றார்.//

:-)))

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

நல்ல கதையா இருக்கே? :-))))

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

அடுத்தப் பதிவு எப்போது?

 

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

குமரன்,

கூடிய விரைவில் பதிக்கிறேன்.

 

நீங்க சொல்லுங்க