This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode(UTF-8)'.
Click here to know how to enable Unicode in your browser

உண்டேன்! உண்டேன்! உண்டேன்!

வாரியார் சொற்பொழிவிலிருந்து..



ஒலி வடிவில் கேட்க இயலாதோருக்காக உரை வடிவில் கீழே:

ஔவையார் ஒரு சமயம் மதுரையிலே பாண்டியனுடைய அரண்மனைக்கு திருமணத்துக்கு போனார்.

அங்க இருக்குற காவல்காரர்கள் எல்லாம் விவேகம் இல்லாதவர்கள். ஔவையாரை, பழுத்த ஞானக் கிழவியை, உள்ளே அனுமதிக்கவில்லை.

"போ வெளியே! கெழவிகளுக்கெல்லாம் இங்கே என்ன வேலை!"

அவர் தமிழ் பழம்! ஔவையார் ஒன்னும் சொல்லலை. "நல்லது"ன்னார்.

மாலை நேரத்திலே புலவர்களெல்லாம் ஔவையாரைக் கண்டு "அம்மா! பாண்டியர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனியே சாப்பாடெல்லாம் எப்படி இருந்தது?"

"வடை, பாயசம், லாடு, ஜாங்கிரி, குலோப்ஜான், ரொம்ப உயர்வாய் இருந்திருக்கனுமே?"

"நீங்கதானே எங்களுக்கெல்லாம் தலைமை! தமிழ்த் தாய்!" என்று புலவர்கள் கேட்டார்கள்.

ஔவையார் சொன்னார் "உண்டேன்! உண்டேன்! உண்டேன்!"

என்னா உண்ட?

(பாடல்)

"புலவர்களே, பாண்டியராஜா தமிழ் மன்னரு, தமிழ் புலவர்களை ஆதரிக்கின்றவரு, செந்தமிழ் நாட்டுச் செம்மல்! அவர் வீட்டுக் கல்யாணத்துலே நான் எப்படி உண்டேன்?"

(பாடல்)

"மூன்று உண்டேன் ஒன்றே ஒன்று உண்டிலேன்"ன்னாரு.

"நெருக்குண்டேன், தள்ளுண்டேன், நீள் பசியினாலே சுருக்குண்டேன், சோறுண்டிலேன்!"

புலவர்களெல்லாம் சிரித்துக் கொண்டார்கள்."ஔவையாருக்கே இந்த கதியா"ன்னு.

8 கருத்து(க்கள்)

Blogger சிவா சொன்னது�...

நன்றி கோபி! காலையிலேயே ஒரு நல்ல சொற்பொழிவு. வாரியார் சொல்லக் கேட்டாச்சு. கொடுத்தமைக்கு நன்றி.

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

அருமையான ஒளவையார் பாடல். அதனை வள்ளல் வாரியார் விளக்கக் கேட்க அருமையாக இருந்தது. மிக்க நன்றி

 

Blogger G.Ragavan சொன்னது�...

ஔவையின் மிக அருமையான பாடல் இது. இந்தப் பேச்சை நான் ஒலிப்பேழையிலேயே கேட்டிருக்கிறேன். இந்த ஒலிப்பேழைகளின் தரம் நாள் படக் கெடுகிறது. இவைகளை மின்னியலாகச் சேர்த்து வைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

உண்டேன் உண்டேன் உண்டேன் என்று தொடங்கும் பாடலில் வழுதி என்று வரும். அதைக் கொண்டுதான் அது பாண்டியன் என்று முடிவு கொள்ள வேண்டும். வாரியார் வாயால் கேட்பது எவ்வளவு சுகம்.

நீங்க சொல்லுங்க - இது ரொம்பச் சிறுசா இருக்கு. தெரியவே மாட்டேங்கி. கொஞ்சம் பெருசாக்குங்களேன்.

 

Blogger ilavanji சொன்னது�...

நன்றிங்க!

எவ்வளவு நாளாச்சு வாரியார் குரல் கேட்டு!

 

Blogger இலவசக்கொத்தனார் சொன்னது�...

வாரியாரின் தமிழ் கேட்க உதவியமைக்கு நன்றி கோபி.

 

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

//நீங்க சொல்லுங்க - இது ரொம்பச் சிறுசா இருக்கு. தெரியவே மாட்டேங்கி. கொஞ்சம் பெருசாக்குங்களேன். //

பெரிசாக்கிட்டேன்.. :-)

 

Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது�...

கோபி!
வாரியாரின் தமிழறிவோடு;இசைப்புலமை எம்மை என்றும் மெய்மறக்கச் செய்வது. எத்தனையோ வருடத்துக்குப் பின் அவர்குரல். அருமை!!!
நன்றி
யோகன் பாரிஸ்

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

நண்பர்களே. அடுத்தப் பதிவு எப்போது வரப்போகிறது?

 

நீங்க சொல்லுங்க

<< முகப்பு�