This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode(UTF-8)'.
Click here to know how to enable Unicode in your browser

வாரியாரின் நகைச்சுவை

வாரியார் சுவாமிகள், ஒரு கோயிலில் திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு வழங்கிக் கொண்டு இருந்தார்.

வாரியார் சுவாமியின் சொற்பொழிவு கேட்பவர்கள் மிகக் கவனமாக கேட்பார்கள். ஏனெனில், அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் திடீரென்று கேள்விகள் கேட்பார். எனவே, முன்வரிசையில் அமர்பவர்கள் மிக்க கவனத்துடன் இருப்பார்கள்.

சிவபெருமானின் பெருமைகளைச் சொன்னபடி இருந்த கிருபானந்தவாரியார் திடீரென்று ஒரு சிறுவனை எழுப்பி "தம்பி! தருமிக்கு பாட்டு எழுதிக் கொடுத்தது யாரு?" என்று கேட்டார்.

அப்போது திருவிளையாடல் படம் வெளிவந்திருந்த சமயம்.

அந்த பையன் சட்டென்று எழுந்து "சிவாஜி" என்றான்.

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

வாரியார் அனைவரையும் நோக்கி "ஏன் சிரிக்கிறீங்க? அந்தப் பையன் சரியாத்தான் சொல்லியிருக்கான்"

"நீங்க நேருவை நேருஜி -ன்னு சொல்றீங்க, காந்தியை காந்திஜி -ன்னு சொல்றீங்க, அதைப் போல்தான் இந்தப் பையன் சிவாவை சிவாஜி-ன்னு சொன்னான், வடக்கே ஒருத்தரை உயர்வா மரியாதையாய் அழைக்க 'ஜி' சேர்ப்பது வழக்கம் , அந்த அர்த்தத்தில் சிவாஜின்னு சொல்லி இருக்கான் " என்றாரே பார்க்கலாம்.

கூட்டம் வாரியாரின் நகைச்சுவைத் திறமை கண்டு வழக்கம் போல் அதிசயித்து நின்றது.

8 கருத்து(க்கள்)

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

:-)

சூப்பருங்க...

இதைப் பற்றி ஏற்கனவே படிச்சிருக்கேன்

//வாரியார் சுவாமியின் சொற்பொழிவு கேட்பவர்கள் மிகக் கவனமாக கேட்பார்கள். ஏனெனில், அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் திடீரென்று கேள்விகள் கேட்பார். எனவே, முன்வரிசையில் அமர்பவர்கள் மிக்க கவனத்துடன் இருப்பார்கள்.//

இந்த வரிகளின் மூலம் சிறு வயதில் நெருக்கியடித்துக் கொண்டு முன்வரிசையில் அமர்ந்து நான் வாரியார் சுவாமியின் சொற்பொழிவு கேட்ட நினைவுகளை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்கள்.

விடையை சரியாய்ச் சொல்லும் சிறுவர்களுக்கு வாரியார் பதிப்பகத்தின் சிறு புத்தகங்களை பரிசாய் வழங்குவார்.

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

இந்த நகைச்சுவை நிகழ்ச்சியை நான் கேட்டிருக்கிறேன். :-)

 

Blogger அனுசுயா சொன்னது�...

இதுவரை வாரியார் சொற்பொழிவை கேட்டதில்லை. ஆனால் உங்கள் பதிவு மூலம் அவரின் டைமிங் சென்‍ஸை அறிய முடிந்தது. நல்ல பதிவு

 

Blogger G.Ragavan சொன்னது�...

வாரியாரின் சிறப்புகளில் ஒன்று இது போன்று இடம் பொருள் ஏவலுக்குப் பொருத்தமாகப் பேசுவதும். இந்த நிகழ்ச்சியை ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் படித்தாலும் சுவைக்கிறது.

 

Blogger Dubukku சொன்னது�...

மிக அருமையான முயற்சி. பாராட்டுக்கள். இந்தப் பதிவை தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன்

http://www.desipundit.com/2006/05/12/variyar/

 

Blogger சிவா சொன்னது�...

வாரியார் கதைகளே எனக்கு புதிது தான். நன்றாக இருக்கிறது. கொடுத்தமைக்கு நன்றி.

 

Blogger Ram.K சொன்னது�...

வாரியாரின் விசிறியான எனக்கு அவரைப் பற்றிய இப்பதிவு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

வாழ்த்துக்கள்.

நன்றி.

 

Blogger பரஞ்சோதி சொன்னது�...

நான் தண்டுபத்து அம்மன் கோயில் கொடைக்கு சொற்பொழிவாற்ற வந்த வாரியார் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி பரிசும், ஆட்டோகிராப்பும் வாங்கினேன்.

 

நீங்க சொல்லுங்க

<< முகப்பு�