This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode(UTF-8)'.
Click here to know how to enable Unicode in your browser

செவ்வாய், மே 09, 2006

ரமா உமா கமா

முருகனுடைய மாமிய பரமசிவம் கையைப் புடிச்சாரா?

வாரியார் சொற்பொழிவிலிருந்து..



ஒலி வடிவில் கேட்க இயலாதோருக்காக உரை வடிவில் கீழே:

மூன்று குழந்தைகள் இருந்து அம்மானை (அம்மானை என்பது ஒரு வகை பாடல்) பாடுவதாக கற்பனை உலகத்திலே சஞ்சரிக்கிறோம்.

ஒரு கொழந்த பேரு ரமா, ஒரு கொழந்த பேரு உமா, ஒரு கொழந்த பேரு கமா, கமான்னா கமலாட்சி

ஒரு கொழந்த பாடுது..

(பாடல்)

அந்த முதல் பெண் ரமா சொல்லுது.

"உமா.. உனக்கு தெரியுமா? பரமசிவம்... கெழம்...
அவர் மகன் முருகன்... முருகனுடைய மாமியார் கைலாசத்துக்கு வந்தார்... இந்த கெழவராகிய பரமசிவம் அவளை கையைப் புடிச்சார். முருகனுடைய மாமியார கையைப் புடிச்சார்"

"ஆஹா... முருகனுடைய மாமிய பரமசிவம் கையைப் புடிச்சாரா?"

(பாடல்)

"எந்தப் பத்திரிக்கையிலும் வர்லை.. கைலாயத்துல இப்படியா? இந்த வயசான சிவபெருமான் மகனுடைய மாமியார கையப் புடிச்சாரா? இது உலகத்துக்கு ஏற்குமா?"

மூன்றாவது பெண் நடை மாற்றிப் பாடுறா... யாரு? கமா...

(பாடல்)

"கந்தனது மாமியாகிய மானை கைப்பற்றியது உலகம் ஏற்குமா?" என்று அந்தப் பெண் கேட்டாள்...

கடைசி பெண் சொன்னாள் "ஏற்கும் என்றே மழு... மழு என்றால் மான்... மழுவதனை ஏந்தி நின்றார் அம்மானை!"

8 கருத்து(க்கள்)

Blogger dondu(#11168674346665545885) சொன்னது�...

பஞ்ச் லைன் குறித்து குழப்பம். மான் எப்படி கந்தனின் மாமியாகும்? வள்ளியின் அன்னையா, தெய்வயானையின் அன்னையா? சீதை பூமாதேவியின் குழந்தை என்பது போல, சகுந்தலை சாகுந்தல பட்சியால் நிழலளிக்கப்பட்டது போல அப்ப்டி ஏதாவது கதை வள்ளியைப் பற்றி உள்ளதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மே 09, 2006 3:41 pm  

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

வாரியார் சொல்வது போலவே, வள்ளியின் அன்னை ஒரு செந்நிற மான் என்கிறது கந்தர் அநுபூதி

இதனாலேயே வள்ளி, செந்நிறக் கூந்தலையும், மான் விழிகளையும் பெற்றிருந்ததாக சொல்வர்.

மே 09, 2006 4:53 pm  

Blogger G.Ragavan சொன்னது�...

திருமகள் மானாக வந்து ஈன்ற குழந்தை வள்ளி என்பதும் ஒரு நம்பிக்கை. ஆகையால்தான் செம்மான் மகள் வள்ளி என்று அருணகிரியும் சொல்கிறார்.

நன்கு நகைச்சுவையாகவும் எளிமையாகப் புரியும்படியாகவும் சொல்லியிருக்கிறார் வாரியார். அற்புதம்.

மே 09, 2006 5:09 pm  

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

அருமையான அம்மானை. அருமையான விளக்கம். முதலில் மான் எப்படி முருகனின் மாமி என்று புரியவில்லை. கொஞ்சம் யோசித்தப் பின் புரிந்தது. 'செம்மான் மகளைத் திருடும் திருடன்' வரிகள் தெள்ளத் தெளிவாக இதனைச் சொல்கின்றனவே. :-)

மே 10, 2006 12:12 am  

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

வள்ளி செந்நிறக் கூந்தலைப் பெற்றிருந்தார் என்பது எனக்குச் செய்தி. இதுவரைக் கேள்விப்பட்டதில்லை. அப்போது வள்ளி இங்கே மேற்கு நாடுகளில் 'blond' என்று சொல்வார்களே அந்த வகையைச் சேர்ந்தவரா? திருடன் வந்ததில் தவறில்லை. :-)

மே 10, 2006 12:13 am  

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

குமரன்,

எனக்கும் இது புது செய்திதான். இதை விளக்கும் பாடல் ஏதும் உள்ளதா எனத் தெரியவில்லை.

வள்ளி செந்நிறக் கூந்தல், மான் விழிகள் பெற்றிருந்தார் என்று கதிர்காமா வலைத்தளம் சொல்கிறது.

'blonde'ஆ? Redhead இல்லியா?

அது சரி... வள்ளியைப் பற்றி குமரனுக்கே தெரியலைன்னா கோபிக்கு எங்கே தெரியப்போகிறது. :-)

மே 10, 2006 11:03 am  

Blogger R.DEVARAJAN சொன்னது�...

மழு என்றால் கோடரி போன்ற ஆயுதமல்லவா ?

தேவ்

ஜூன் 13, 2009 8:14 pm  

Blogger Unknown சொன்னது�...

http://tamil-ilakiyam.blogspot.in/2006/04/13.html

The above link gives more information on this

ஜூன் 10, 2013 2:35 pm  

நீங்க சொல்லுங்க

<< முகப்பு�